New Updates! Fresh news just arrived.

வாவிக்கரை பூங்கா மற்றும் சுற்றுலா படகுச் சேவை திறப்பு! - ...

News

வாவிக்கரை பூங்கா மற்றும் சுற்றுலா படகுச் சேவை திறப்பு!

March 23, 2026 11:38 am
வாவிக்கரை பூங்கா மற்றும் சுற்றுலா படகுச் சேவை திறப்பு!
காத்தான்குடி நகரின் அழகிய மேம்பாட்டையும் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியையும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய முயற்சியாக, “வாவிக்கரை பூங்கா மற்றும் சுற்றுலா படகுச் சேவை” திட்டம் ஞாயிற்றுக்கிழமை (22) விழாக்கோலமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் சிந்தனை மற்றும் வழிகாட்டலின் பேரில் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின் திறப்பு விழா, காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள், திட்டத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார்.

இத்திட்டம் காத்தான்குடி பகுதியின் சுற்றுலா வளங்களை மேம்படுத்துவதுடன், உள்ளூர் மக்களுக்கு புதிய வருமான வாய்ப்புகளையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நகரின் சுற்றுச்சூழல் அழகை உயர்த்துவதிலும், மக்களின் ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு தேவைகளை பூர்த்தி செய்வதிலும் இத்திட்டம் முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டது.

இவ்விழாவில் நகர சபை உபதவிசாளர், சபை உறுப்பினர்கள், சமூகத் தலைவர்கள், நலன்விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் என பெரும்திரளானோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now