எதிர்கட்சி தலைவர் சஜித் அரசியல் இருப்புக்காக சட்டவிரோத கட...
News
எதிர்கட்சி தலைவர் சஜித் அரசியல் இருப்புக்காக சட்டவிரோத கடற் தொழிலை ஆதரிக்கின்றார்!
அனுர அரசாங்கத்தால் சட்டவிரோத கரைவலை நிறுத்தப்பட்டமைக்கு எதிராக போராடுபவர்களோடு எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச இணைந்து குரல் கொடுப்பது அவரது அரசியல் இருப்பினை தக்கவைக்க எடுக்கும் முயற்சியாகும் என வடமாகாண கடற் தொழிலாளர் இணையத்தினுடைய உறுப்பினர் அன்னலிங்கம் அன்னராசா குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் இன்றையதினம் அவரை தொடர்புகொண்டு வினவிய நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், அவர் தெரிவிக்கையில்,
தற்போதைய அரசாங்கமானது சட்டவிரோத கரைவலையினை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமையினை வரவேற்பதோடு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவினுடைய செயற்பாட்டுக்கு எனது கண்டனத்தினையும் தெரிவிக்கிறேன்.
கடந்த வாரம் சட்டவிரோதமான கரைவலையினை நிறுத்தியமைக்கு எதிராக ஜனாதிபதி செயலகத்தினுடைய முன் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
குறித்த போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க்கும் சஜித் பிரேமதாச முறையற்ற சட்டவிரோதமான தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொண்டமையானது வடபகுதியின் மீனவர்கள் சார்பில் கண்டிக்கின்றோம்.
2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்பு வடபகுதி கடலில் இடம்பெறும் சட்ட விரோத மீன்பிடி முறைகளினை நடத்த வேண்டும் என வடபகுதி மீனவர்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகளினை முன்வைத்து வருகின்றனர்.
2023 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த சஜித் பிரேமதாசாவிடம் பாரம்பரிய மீனவர்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் வகையில் இடம்பெறும் சட்ட விரோத மீன்பிடி முறைகளினை தடை செய்ய வேண்டும் அதனை பாராளுமன்றத்தில் நீங்கள் பேச வேண்டும் என கோரிக்கையினை முன் வைத்தோம்.
இருந்தபோதிலும், சஜித் பிரேமதாச கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னர் இடம்பெற்ற சட்டவிரோத மீன்பிடியினை தடை செய்தமைக்கு ஆதரவாக கலந்து கொண்டமையானது அவரினுடைய பங்கு ரோத்து அரசியலை எடுத்துக்காட்டுகின்றது.
இந்நிலையில், இலங்கையில் மாறி மாறி வந்த அரசாங்கங்களிடம் வடபகுதி மீனவர்கள் தொடர்ச்சியாக சட்டவிரோத மீன்பிடி முறைகளினை நிறுத்துமாறு பல்வேறு சந்தர்பங்களில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் தற்போது ஒரு முறையினை மட்டும் தடை செய்திருக்கின்றார்கள்.
ஆனால் இது போதாது கடலில் சட்டவிரோத அனைத்து மீன்பிடி முறைகளும் நிறுத்தப்பட வேண்டும் என்பதே எமது மீனவர்களினை எதிர்பார்ப்பும் கோரிக்கையாகவும் உள்ளது.
ஆகவே தனது அரசியல் இருப்புக்காக எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச சட்ட விரோத மீன்பிடி முறைகளினை ஊக்குவிக்கும் போராட்டங்களில் கலந்து கொள்வதினை நிறுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பு.கஜிந்தன்