New Updates! Fresh news just arrived.

துபாய் அசிதவின் சொத்துக்களை முடக்க உத்தரவு!

News

துபாய் அசிதவின் சொத்துக்களை முடக்க உத்தரவு!

May 13, 2026 11:09 pm
துபாய் அசிதவின் சொத்துக்களை முடக்க உத்தரவு!
பெருமளவான போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் 'துபாய் அசித' என்பவருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் 105 பவுன் தங்கத்தை முடக்குவதற்கு பாணந்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் முன்வைத்த காரணிகளை தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவருக்குச் சொந்தமான சுமார் 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேன் ஒன்றையும், 10 இலட்சம் ரூபாய் பணத்தையும் முடக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தத் தங்கம் மற்றும் பணம் ஆகியவற்றை 'துபாய் அசித' தமது உறவினர்களின் பெயர்களில் கொள்வனவு செய்திருந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now