New Updates! Fresh news just arrived.

ஷாணி அபேசேகரவுக்கு பதவி உயர்வை வழங்க உத்தரவு!

News

ஷாணி அபேசேகரவுக்கு பதவி உயர்வை வழங்க உத்தரவு!

May 13, 2026 9:53 pm
ஷாணி அபேசேகரவுக்கு பதவி உயர்வை வழங்க உத்தரவு!
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினுடைய பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரான ஷாணி அபேசேகரவை, பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தரம் உயர்த்துமாறும் நிர்வாக மேன்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்தான தீர்மானம் இன்று (13) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.

குறித்த பதவி உயர்வானது 2026 ஒகஸ்ட் 25 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளதோடு, அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காலம் முதல் இதுவரையான காலப்பகுதிக்கான நிலுவை ஊதியம் மற்றும் கொடுப்பனவுகள் அனைத்தினையும் செலுத்துமாறும் தீர்ப்பாயம் மேலும் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை பொலிஸ் வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற அதிகாரிகளில் ஒருவராகக் கருதப்படுகின்ற ஷாணி அபேசேகர, நாட்டின் சமீபத்திய வரலாற்றில் இடம்பெற்ற பல சிக்கலான குற்றப் புலனாய்வுகளினை வழிநடத்திய திறமையான அதிகாரியாக அறியப்படுகின்றார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டிருந்த ஷாணி அபேசேகர, சுமார் 11 மாதங்களுக்கு அதிக காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்த்தால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டு 3/2018 சுற்றுநிருபத்தின் விதிகளின்படி மீண்டும் சேவையில் இணைந்துகொண்ட ஷாணி அபேசேகர, அதன் பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினுடைய பணிப்பாளராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now