New Updates! Fresh news just arrived.

சாதாரண தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பம்; பரீட்சார்த்திகளுக்கு...

News

சாதாரண தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பம்; பரீட்சார்த்திகளுக்கு விசேட அறிவித்தல்

February 16, 2026 3:58 pm
சாதாரண தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பம்; பரீட்சார்த்திகளுக்கு விசேட அறிவித்தல்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 3,545 பரீட்சை நிலையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளன.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் காவல்துறை மற்றும் முப்படைகளின் ஒத்துழைப்புடன் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஏதேனும் அவசர நிலைகள் ஏற்பட்டால் அவற்றை எதிர்கொள்ளவும், போக்குவரத்து வசதிகள் குன்றிய பகுதிகளிலுள்ள மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி கோரப்பட்டுள்ளது.

டிட்வா சூறாவளி காரணமாக தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட கட்டாய ஆவணங்களை இழந்த மாணவர்களுக்காக விசேட சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

அடையாள அட்டையை இழந்த மாணவர்கள், கடவுச்சீட்டு அளவிலான இரண்டு புகைப்படங்களை சமர்ப்பித்து பரீட்சைக்குத் தோற்ற முடியும்.

பாடசாலை விண்ணப்பதாரிகள் அதிபரிடமும், தனியார் விண்ணப்பதாரிகள் கிராம சேவகரிடமும் அந்தப் புகைப்படங்களில் கையொப்பம் பெற்று சான்றுப்படுத்த வேண்டும்.

பரீட்சையின் நேர அட்டவணை குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே பரீட்சார்த்திகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள கால அட்டவணையை மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பரவக்கூடிய உறுதிப்படுத்தப்படாத அல்லது பழைய கால அட்டவணைகளை நம்பி ஏமாற வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்து மூன்று மாதங்களுக்குள் அதன் பெறுபேறுகளை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் இதன்போது அறிவித்தார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now