அனோஜன் இலங்கை திரும்பும் வரைக்கும் எமது முயற்சிகள் தொடரும...
News
அனோஜன் இலங்கை திரும்பும் வரைக்கும் எமது முயற்சிகள் தொடரும்!
சவூதி அரேபியாவில் சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையினை இரத்துச் செய்வதற்கான தீர்மானத்தை தொடர்ந்து, அவரது வழக்கில் ஏற்பட்டுள்ள சாதகமான முன்னேற்றத்தினை தாம் மனப்பூர்வமாக வரவேற்பதாக இலங்கை தமிழரசு கட்சியினுடைய பாராளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
குறித்த செய்தி, அவரது குடும்பத்தினருக்கும், அவருக்காக அயராது பாடுபட்டுள்ள அனைவருக்கும் பெரும் ஆறுதலையும் புதிய நம்பிக்கையினையும் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நம்பிக்கையளிக்கும் முன்னேற்றமானது, உலகெங்கிலுமுள்ள அரசாங்கங்கள், இராஜதந்திரப் பிரதிநிதிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள், அரசியல் மற்றும் மதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அக்கறையுள்ள பொதுமக்கள் ஆகியோரினுடைய கூட்டுமுயற்சிகளையும் ஒற்றுமையையும் பிரதிபலிக்கின்றது.
குறித்த முக்கியமான முன்னேற்றத்தினை நாம் வரவேற்கின்ற அதேவேளை, எமது முயற்சிகள் இத்தோடு, முடிவடையவில்லை. தேவையான அனைத்து விதமான சட்ட நடைமுறைகளும் உரிய சட்டச் செயல்முறைகளும் முழுமையாக நிறைவானதன் பின், சிவராசா அனோஜன் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு, அவரது குடும்பத்தோடு, மீண்டும் இணைக்கப்படும் நாளிலேயே எமது முயற்சியானதுஇச் முழுமை பெறும்.
இச்சம்பந்தப்பட்ட சட்டங்களுக்கும் சட்ட நடைமுறைகளுக்கும் அமைவாக, அவரை இயன்றளவு விரைவாகவும், பாதுகாப்பாகவும் நாடு திரும்பச் செய்வதற்காக இலங்கை மற்றும் சவூதி அரேபிய அதிகாரிகள் தங்களுக்கு இடையிலான ஆக்கபூர்வமான ஒத்துழைப்பினை தொடர்ந்து முன்னெடுப்பார்கள் என்று நான் மனப்பூர்வமாக நம்புகின்றேன்.
இக்கூட்டுமுயற்சிக்குப் பங்களித்துள்ள அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இதயபூர்வமான நன்றிகளை நான் தெரிவித்துக்கொள்கின்றேன். அவர்களது அர்ப்பணிப்பும், மனிதநேயம் மற்றும் ஒற்றுமை அளப்பரியவை.
இன்று குறித்த சாதகமான முன்னேற்றத்தை நன்றியுணர்வோடும் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடனும் வரவேற்கின்றோம்.
இருந்தபோதிலும், சிவராசா அனோஜனை பாதுகாப்பாக இலங்கைக்குத் திரும்பி, தனது அன்புக்குரியவர்ளுடன், மீண்டும் இணைக்கும் நாளே நாம் உண்மையாகக் கொண்டாட வேண்டிய நாளாகும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.