ஞானசார தேரருக்காக கண்டியிலிருந்து ஆரம்பமான பாதயாத்திரை! -...
News
ஞானசார தேரருக்காக கண்டியிலிருந்து ஆரம்பமான பாதயாத்திரை!
கலகொடஅத்தே ஞானசார தேரரினுடைய காவி உடையை களைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரை விடுவிப்பதற்காகவும் மகா சங்கத்தினரினை முன்னிலைப்படுத்திய பாதயாத்திரினை ஒன்று இன்று (10) கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் இ ருந்து ஆரம்பமானது.
இஅதன்படி, இங்கு கருத்துத் தெரிவித்த பூஜ்ய உலப்பனே சுமங்கல தேரர், தற்போதைய அரசாங்கத்தால் தன்னிச்சையான முறையில் ஞானசார தேரருக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த காலத்தில் வாரியப்பொல ஸ்ரீ சுமங்கல தேரர் தேசத்தினதும் சம்புத்த சாசனத்தின் பாதுகாப்புக்காகவும் குரல் கொடுத்தது போன்று, ஞானசார தேரரும் நாடு, தேசம் மற்றும் சாசனத்தினுடைய அபிவிருத்திக்காகவே குரல் எழுப்பினார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஞானசார தேரர் சிறையிலடைக்கப்பட்டுள்ளது அவரது தனிப்பட்ட காரியத்திற்காக அல்ல என்றும், அவர் சிறைத்தண்டனை அனுபவிப்பது முழு தேசம் மற்றும் சாசனத்திற்காகவே என்றும் தெரிவித்த சுமங்கல தேரர், அவரைத் தனிமைப்படுத்தாமல் நிபந்தனை இன்றி அவருக்காக முன்னிற்பது அனைவரினதும் கடமையாகும் என்றும் வலியுறுத்தினார்.
ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் வாரியப்பொல சுமங்கல தேரரினுடைய சிலைக்கு அருகிலும் ஆரம்பமான குறித்த பாதயாத்திரை, ஞானசார தேரர் சிறைவைக்கப்பட்டுள்ள இடம் வரைக்கும் சென்றடையவுள்ளது.
அவருக்கு விடுதலை கிடைக்கும் வரை மற்றும் அநீதிக்கு எதிராக முன்னெடுக்கப்படும் குறித்த போராட்டம் எந்த வகையிலும் கைவிடப்பட மாட்டாது என்றும், நிலவும் அடக்குமுறைகளுக்கு மத்தியில் வன்முறையற்ற முறையில் பாதயாத்திரையில் இணையுமாறும் உலப்பனே சுமங்கல தேரர் அனைத்து மக்களிடமும் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.