New Updates! Fresh news just arrived.

இலங்கையை 82 ஓட்டங்களால் வீழ்த்தியது பாகிஸ்தான்!

News

இலங்கையை 82 ஓட்டங்களால் வீழ்த்தியது பாகிஸ்தான்!

October 11, 2026 11:09 pm
இலங்கையை 82 ஓட்டங்களால் வீழ்த்தியது பாகிஸ்தான்!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது 20 க்கு 20 போட்டியில் பாகிஸ்தான் அணி 82 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய இரண்டாவது டி20 (T20) சர்வதேச போட்டி இன்று (11) நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 215 ரன்களைக் குவித்தது.

பாகிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் மாஸ் சதாகட் ஓட்டங்களைப் 96 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.

இந்நிலையில் 216 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 82 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now