New Updates! Fresh news just arrived.

அபிஷேக் சர்மாவின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் தலைவர் - ...

News

அபிஷேக் சர்மாவின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் தலைவர்

October 14, 2026 10:20 am
அபிஷேக் சர்மாவின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் தலைவர்
பாகிஸ்தான் அணியின் தலைவர் சாஹிப்ஸதா பர்ஹான் (Sahibzada Farhan), இரண்டு ஐ.சி.சி முழு உறுப்பினர் நாடுகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருதரப்பு T20I தொடர் ஒன்றில் அதிக ௐட்டங்களை குவித்த சாதனையை முறியடித்துள்ளார்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று (14) இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 தொடரில் அவர் இந்த சாதனையை பதிவு செய்துள்ளார்.

பர்ஹான் தனது தொடர்ச்சியான மூன்றாவது அரைசதத்தை நேற்று பெற்றதுடன் இந்தத் தொடர் முழுவதிலும் 238 ஓட்டங்களை மொத்தமாக அவர் பெற்றார்.

இதன்மூலம் ஐ.சி.சி முழு உறுப்பு நாடுகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 தொடரில் அதிகூடிய ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

முன்னதாக இந்த ஆண்டில் இந்திய அணியின் அபிஷேக் சர்மா ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 229 ஓட்டங்களை பெற்றிருந்தமையே சாதனையாக இருந்தது.

அதனையே தற்போது பாகிஸ்தான் அணித் தலைவர் சாஹிப்ஸதா பர்ஹான் முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now