New Updates! Fresh news just arrived.

முத்தரப்பு தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது பாகிஸ்தான் - Gur...

News

முத்தரப்பு தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது பாகிஸ்தான்

October 18, 2026 10:29 pm
முத்தரப்பு தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது பாகிஸ்தான்
பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில், இலங்கையை 37 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணி வீழ்த்தியுள்ளது.

இன்று (18) ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

பாகிஸ்தான் அணியை ஷஹீன் அப்ரிடியும், இலங்கை அணியை குசல் மெண்டிஸும் வழி நடாத்தியிருந்தனர்.

இலங்கை அணி தனது பந்துவீச்சுப் பலத்தை அதிகரிக்கும் வகையில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள், சகலதுறை ஆட்டக்காரர் அத்தோடு ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் களமிறங்கியது.

இதற்கமைய முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 49.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 305 ஓட்டங்களைப் பெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் சல்மான் ஆஹா 107 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.

இந்நிலையில் 306 வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி 48.1 ஓவர்கள் நிறைவில் 268 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

இலங்கை அணிசார்பில் துடுப்பாட்டத்தில் பவன் ரத்நாயக்க 79 ஓட்டங்களையும், ஜனித் லியனகே 60 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 44 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

எனினும் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்காமையினால் இலங்கை அணிக்கு வெற்றி பெற வேண்டிய வாய்ப்புகள் அதிகம் இருந்தும் இந்தப் போட்டியில் தோல்வியடைந்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now