New Updates! Fresh news just arrived.

பலஸ்தீன கால்பந்து வீரர் சுட்டுக் கொலை : சர்வதேச விளையாட்ட...

News

பலஸ்தீன கால்பந்து வீரர் சுட்டுக் கொலை : சர்வதேச விளையாட்டு அமைப்புகள் இரங்கல்

July 3, 2026 11:57 am
பலஸ்தீன கால்பந்து வீரர் சுட்டுக் கொலை : சர்வதேச விளையாட்டு அமைப்புகள் இரங்கல்
பாலஸ்தீன கால்பந்து அணியின் இளம் கோல்கீப்பரான சலீம் அல் அஷ்கர் (32), காசாவில் இஸ்ரேலிய படைகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

தெற்கு காசா பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகரின் வடகிழக்கே அமைந்துள்ள அல்கராலா என்ற நகரத்தில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் நடாத்திய தாக்குதலின் போது சலீம் அல் அஷ்கர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார்.

இளம் வயதிலேயே திறமையான கோல்கீப்பராக முத்திரை பதித்த சலீம் அல் அஷ்கருக்கு, கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்து முடிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சலீம் அல் அஷ்கரின் மரணத்தை தொடர்ந்து, பாலஸ்தீன கால்பந்து சங்கம் புள்ளிவிவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் காசாவில் போர் தொடங்கியதில் இருந்து, இஸ்ரேலிய படைகளின் தொடர் தாக்குதல்களால் 1,000 இற்கும் மேற்பட்ட பாலஸ்தீன விளையாட்டு வீரர்கள் மற்றும் தடகளப் பயிற்சியாளர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு உத்தியோகப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

சலீம் அல்அஷ்கரின் திடீர் மறைவால் வாடும் அவரது மனைவி, பெற்றோருக்கு சர்வதேச விளையாட்டு அமைப்புகள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now