பண்டிகைக் காலத்தில் உணவு பொருட்கள் தொடர்பில் அவதானம் - Gu...
News
பண்டிகைக் காலத்தில் உணவு பொருட்கள் தொடர்பில் அவதானம்
பொதுமக்களிடம் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்
உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
குளிரூட்டப்பட்ட மீன், இறைச்சி வகைகளைக் கொள்வனவு செய்யும் போது விசேட கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொதியிடப்பட்ட உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது மிக முக்கியமாக அவற்றின் காலாவதியாகும் திகதி அத்தோடு உள்ளடக்கப்பட்டுள்ள பொருட்கள் குறித்தும் அவதானம் செலுத்துமாறு உபுல் ரோஹண பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் உணவு விற்பனை நிலையங்களைப் பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகளைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் முன்னெடுக்கவுள்ளதாகவும் உபுல் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.