New Updates! Fresh news just arrived.

பெற்றோர் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளுக்கு கொடுப்பனவு! - Gu...

News

பெற்றோர் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளுக்கு கொடுப்பனவு!

May 19, 2026 9:17 pm
பெற்றோர் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளுக்கு கொடுப்பனவு!
வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் 2 முதல் 13 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகள் பகல்நேர பராமரிப்பு நிலையங்களில் இருந்தால், அவர்களுக்கு மாதமொன்றுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்கள் பற்றிய பாராளுமன்ற ஆலோசனைக் குழுவிடம் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் மற்றும் பிரதி அமைச்சர் நாமல் சுதர்சனவின் பங்கேற்புடன் அண்மையில் பாராளுமன்றத்தில் இக்குழு கூடிய போதே அதிகாரிகள் இதனைத் குறிப்பிட்டுள்ளனர்.

சிறு பிள்ளைகளைக் கொண்ட பெண்கள் வெளிநாடு செல்வதால் சமூகத்தில் எழும் பிரச்சினைகள் குறித்து தலையிடுமாறு, இதற்கு முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொது மேலாளருக்கு (உள்நாட்டு விவகாரங்கள்) இந்த ஆலோசனைக் குழு வழங்கியிருந்த அறிவுறுத்தல்களின் முன்னேற்றம் குறித்து வினவிய போதே அதிகாரிகள் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now