New Updates! Fresh news just arrived.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!

News

நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!

March 17, 2026 9:32 am
நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!
மார்ச் இரண்டாவது வாரத்திற்கான பாராளுமன்றம் இன்று (17) காலை 9.30 மணிக்கு ஆரமாகியுள்ளது.

தற்போதைய உலக நிலவரம் குறித்த ஒத்திவைப்பு விவாதம் வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற உள்ளது.

சபையை ஒத்திவைக்கும் பிரேரணையாக எதிர்க்கட்சியால் முன்வைக்கப்பட்ட தொடர்புடைய பிரேரணை விவாதிக்கப்பட உள்ளது என்று பாராளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.

ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஊதியம் மற்றும் நிபந்தனைகளை நிர்ணயிப்பதற்கான இடைக்கால பிரேரணை இன்று விவாதிக்கப்படவுள்ளது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகள் நாளை (18) விவாதிக்கப்பட உள்ளதாக பாராளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now