New Updates! Fresh news just arrived.

நடைபாதை வியாபாரிகளை அகற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு - ...

News

நடைபாதை வியாபாரிகளை அகற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு - சம்மாந்துறையில் சம்பவம்!

June 15, 2026 3:03 pm
நடைபாதை வியாபாரிகளை அகற்றும் நடவடிக்கை   முன்னெடுப்பு -  சம்மாந்துறையில் சம்பவம்!
வீதியோரங்களில் உரிய அனுமதியின்றி பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு இடையூறான நடைபாதை வியாபாரிகளை அகற்றும் மற்றும் ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் குறித்த முன்னெடுப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அண்மையில் ஏற்பட்ட விபத்துக்கள் மக்கள் முறைப்பாடுகள் தொடர்பில் பிரதேச சபை நகரின் அழகினை மெருகூட்டுவதற்காகவும் விசாலமான வீதி ஊடாக பாதுகாப்பான போக்குவரத்து வசதியினை மேற்கொள்ளும் வகையிலும் இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது சம்மாந்துறை பிரதேச சபை மற்றும் பொலிஸார் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் இணைந்து இச்செயற்பாட்டினை முன்னெடுத்திருந்து வருகின்றனர்.

அத்துடன் சம்மாந்துறை நகரின் வீதியோரங்களில் உரிய அனுமதியின்றி இயங்கி வந்த நடைபாதை வியாபாரிகளை அகற்றப்பட்டதுடன் ஏனையோரை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையும் தொடராக செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

குறித்த செயற்திட்டன் ஊடாக நகரின் நெரிசலைக் குறைக்கவும் பொதுமக்களினுடைய போக்குவரத்து வசதியை மேம்படுத்தவும் பாதசாரிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை அவசியமான ஒன்றாக அமைந்துள்ளதாகவும் முறையான திட்டமிடல் மற்றும் கூட்டுப் பொறுப்போடு முன்னெடுக்கப்பட்ட இந்தச் செயற்பாடு சம்மாந்துறை நகரை இன்னும் நேர்த்தியான ஒழுக்கமான மற்றும் பாதுகாப்பான ஒரு வணிக மையமாக மாற்ற வழிவகுக்கும் எனவும் பொதுமக்கள் உரிய அதிகாரிகளுக்கு பாராட்டுக்களினை தெரிவித்துள்ளனர்.

மேலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு தான் நகரின் முன்னேற்றத்திற்கான அடிப்படையாகும்.எனவே அழகான சம்மாந்துறை நகரை உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என உரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now