New Updates! Fresh news just arrived.

பேலியகொட மெனிங் சந்தை நடமாடும் வர்த்தகத்தை முறைப்படுத்த ...

News

பேலியகொட மெனிங் சந்தை நடமாடும் வர்த்தகத்தை முறைப்படுத்த நடவடிக்கை!

September 5, 2026 1:56 pm
பேலியகொட மெனிங் சந்தை  நடமாடும் வர்த்தகத்தை முறைப்படுத்த நடவடிக்கை!
பேலியகொட மெனிங் சந்தை தொகுதியில் உத்தியோகபூர்வமற்ற முறையில் முன்னெடுக்கப்படும் சிற்றுண்டி வியாபாரத்தை முறைப்படுத்துவதற்காக புதிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க அதன் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

இதன் கீழ், தெரிவு செய்யப்பட்ட வர்த்தகர்களுக்கு முறையான நடமாடும் விற்பனைக்கூடங்கள் மற்றும் அதற்குத் தேவையான விசேட உபகரணத் தொகுதிகளை இலவசமாக வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான நடமாடும் விற்பனைக்கூடங்கள் மற்றும் உபகரணத் தொகுதிகளை வழங்கும் நிகழ்வு நேற்று (04) கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில அவர்களின் தலைமையில் பேலியகொட புதிய மெனிங் வர்த்தகத் தொகுதியில் நடைபெற்றது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now