தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களிலுள்ளோர் இலங்கையில் முதல...
News
தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களிலுள்ளோர் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்!
தமிழக அரசியல் மாற்றம் ஜனநாயகத்திற்கு நல்லது.தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி சிறப்பாக இருக்கும் என்னும் நம்பிக்கையுள்ளதாகவும், தமிழ்நாடு உள்ளிட்ட தென்பிராந்திய மாநிலங்களிலுள்ள முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் எனவும் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இதன்படி, இந்தியா யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் முதன்முறையாக தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் அமைச்சருக்கு கொழும்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நேற்று வியாழக்கிழமை (18) முற்பகல் வருகை தந்த நிலையில் அவரை திருச்சி அய்மான் மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் மற்றும் செயலாளர் ஹபிபுல்லாஹ், மூத்த ஊடகவியலாளரான திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
இந்நிலையில், அங்கு வந்திருந்த ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது ,
கேள்வி : வெளிநாடுகளில் இலங்கையில் தான் முதல் முதலில் இசைமுரசு நாகூர் ஈ.எம். ஹனிபாவினுடைய நூற்றாண்டு விழா சிறப்பாக நடத்தப்பட்டது. அதைபோன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் முதன்முதலில் அமைச்சராக இடம்பெற்றுள்ளவருக்கும் பாராட்டு விழா எதுவும் நடத்தப்படுமா?
பதில் : இந்தியா யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு முதன்முறையாக அமைச்சரவையில் பங்கேற்றிருக்கும் அமைச்சர்களுக்கு பாராட்டு விழா நடத்துவது தொடர்பில் கட்சி ரீதியாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும், நிச்சயமாக பாராட்டு விழா தொடர்பில் விரைவில் திகதி முடிவு செய்யப்படும்.
கேள்வி : தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி செயற்பாடுகள் தொடர்பில் உங்கள் கருத்து என்ன ?
பதில்: தமிழகத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்றிருப்போர் . இதற்கு முன்பு ஆட்சி அதிகாரத்தில் இல்லாத ஒரு வித்தியாசமான அணியினர் ஆவார்கள், எதிர்பாராத வகையில் ஒரு பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சிக்கு வந்திருக்கின்றார்கள்.
ஜனநாயகத்தில் இதுபோன்ற இடைக்கால மாற்றங்களானது வருவது நல்லது. முந்தைய ஆட்சியாளர்கள் தமிழகத்தினை கொண்டு நிறுத்திய இடத்தில் இருந்து, இந்தப் புதிய ஆட்சியாளர்கள் மாநிலத்தினை இன்னும் அடுத்தகட்ட முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்வார்கள் என்ன நாங்கள் நம்புகின்றோம். தமிழக வெற்றிக் கழகமானது நல்ல முறையில் சிறப்பாக செயற்படும் என்றும் நம்பிக்கை இருக்கின்றது.
கேள்வி : இருநாட்டு மீனவர்கள் பிரச்சினைகளுக்கு தொடர்பிலான நிரந்தர தீர்வு என்ன?
பதில் : மீனவர் பிரச்சினைகள் என்பது இரு தரப்பிலும் மனிதாபிமான ரீதியாக அணுகப்பட வேண்டிய ஒரு விடயம். சட்ட மீறல்கள் என்னும் விவகாரத்தினையும் தாண்டி, மக்களினுடைய வாழ்வாதாரத்தை இதில் கவனத்தில் கொள்ள வேண்டும். இரு தரப்பிலும் சில விட்டுக்கொடுப்புகளுடன் இதற்கு சுமுக முடிவு காணப்பட வேண்டும் என்பதே எங்களினுடைய விருப்பம்.
இது தொடர்பில் தமிழ்நாடு மாநில அரசும், மத்திய அரசும் மற்றும் இலங்கையினுடைய மத்திய அரசு, யாழ். குடாநாட்டு மீனவர்களிடம் இணைந்து பேச்சுவார்த்தைகளினை முன்னெடுக்க வேண்டும். எங்களது மீன்பிடித்துறை அமைச்சரும் ஏற்கனவே தமிழகத்திற்கு வந்து, இங்குள்ள அரசியல் தலைமைகளுடன் மத்திய அரசுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது இராஜதந்திர மட்டத்தில் பேசித் தீர்க்கப்பட வேண்டிய விவகாரம் என்பதினால், நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகள் தொடர்பில் இப்போதைக்கு கருத்துக் கூறுவது கடினம்.
இலங்கை மக்களினுடைய தற்போதைய வாழ்வாதாரம் மற்றும் விலைவாசி உயர்வு தொடர்பில் பேசுகையில், தற்போதைக்கு விலைவாசி விவகாரத்தில் பெரிய முன்னேற்றமானது எதுவும் இல்லை. நாளுக்கு நாள் விலைவாசி ஏறிக்கொண்டுதான் செல்கின்றது.
மத்திய கிழக்கு யுத்தத்தினை பொறுத்தவரைக்கும்,மோதல் தவிர்ப்பு ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைக்கு இன்னும் அநேக நாட்கள் எஞ்சியுள்ளன. அது சுமுகமாக முடிந்தாலும், அதன் சாதகமான பலன்களினை அனுபவிக்க இன்னும் 2 முதல் 3 மாதங்கள் வரை ஆகும் என ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். ஆகவே, உலகளாவிய குறித்த யுத்த சூழ்நிலைகளினால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சுமைகளினையும், ஏற்கனவே இலங்கையில் உள்ள பொருளாதார வீழ்ச்சியையும் சேர்த்து சமாளிப்பது என்பது தற்போதைய அரசுக்கு மிக சவாலான காரியமாகவும் உருவெடுத்துள்ளது .
திமுக அரசாக இருந்தாலும் சரி அல்லது தமிழக வெற்றிக் கழகமானாலும் சரி, இரு நாடுகளுக்கும் இடையிலுள்ள முரண்பாடுகளை தீர்க்க மத்திய அரசோடு இணைந்துதான் செயற்பட வேண்டும்.
சர்வதேச நாணய மாற்று விகிதத்தில் இலங்கை நாணயமானது சந்தித்திருக்கும் வீழ்ச்சி, இறக்குமதியாளர்களினை பெரிய அளவில் பாதித்துள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் பயிர் உரம் (பசளை) போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கான இறக்குமதி என்பனவும் இதனால் முடங்கியுள்ளது.
மேலும், சர்வதேச நாணய நிதியத்தினுடைய (IMF) உடன்படிக்கையின்படி கடன்களினை மறுசீரமைப்பு செய்ய எங்களுக்கு இரண்டு வருட கால அவகாசமானது அளிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும், கச்சா (மசகு) எண்ணெய் மற்றும் இதர அத்தியாவசிய இறக்குமதிகளானது எங்களினுடைய அந்நியச் செலாவணி இருப்பை வேகமாக குறைந்து வருகின்றது. சர்வதேச நாணயநிதியமானது எதிர்பார்த்த அளவை விடவும் குறைந்து வருவது நாட்டுக்கு மேலும் ஒரு பாரிய கடன் சுமையினை ஏற்படுத்தலாம் எனவும் அச்சம் நிலவுகின்றது.
குறித்த கடன் சுமையைச் சமாளிப்பது எப்படி என்னும் கேள்விக்கு பதிலளித்த அவர், பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க நாம் ஏற்றுமதிகளினை அதிகரிக்க வேண்டும் அல்லது வெளிநாட்டு முதலீடுகளினை ஈர்க்க வேண்டும். இந்த இரண்டு விடயங்களிலும் தற்போதைய இலங்கை அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகின்றது. குறிப்பாக, இந்தியாவினுடைய தமிழ்நாடு உள்ளிட்ட தென்பிராந்திய மாநிலங்களிலுள்ள முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வர