மக்களின் சேமிப்புகள் சூட்சகமாகச் சுரண்டப்படுகின்றன: அம்ப...
News
மக்களின் சேமிப்புகள் சூட்சகமாகச் சுரண்டப்படுகின்றன: அம்பலப்படுத்திய இரானியேஸ் செல்வின்!
யாழ். மாவட்டத்தின் மக்கள் சிறுகச் சிறுக சேர்க்கும் சேமிப்புக்கள் எல்லாம் மிகச் சூட்சகமான முறையில் கொள்ளையிடப்படுவதாக சுட்டிக்காட்டிய சமூக ஆர்வலரான இரானியேஸ் செல்வின், குறித்த பாரிய பொறிக்குள் எமது பெண்களே அதிகம் சிக்க்கிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைற்ற "நெகிழ்ச்சிமிக்க பெண்கள் தேசத்தின் பெருமை" நிகழ்வில் பசுமை மற்றும் நீலப் பொருளாதாரம் குறித்து உரையாற்றும் போது இவ்வாறு கூறிய அவர் மேலும் கூறுகையில்,
பெண்களினுடைய இறைமை என்பது வேறு. பெண்களினுடைய பொருளாதார இறைமை என்பது வேறு. இவ்இரண்டிலும் சிக்குண்டு முன்னேறிச் செல்ல முடியாத எமது பெண்கள் தள்ளாடிக் கொண்டிருக்கின்றனர்.
இதேவேளை, இலங்கையிலுள்ள வங்கிக் கட்டமைபுகளின் ஊடாக பெறும் நிதி வசூலிப்பில் யாழ் மாவட்டம் முதல் நிலையிலிருக்கின்ற போதும் வங்கிக் கடன் வழங்கலில் யாழ்ப்பாணம் 25 ஆவது நிலையில் இருக்கின்றது.
இது எமது நிதியினை எம்மிடம் இருந்து வங்கிகள் சுரண்டி தென்னிலங்கை மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு தாரைவார்க்கும் செயலாக நாளாந்தம் நடந்தேறுகின்றது.
இதேவேளை, வங்கிகள் எமது மாவட்டத்தின் மக்களினுடைய நலன்களில் அக்கறை கொள்ளாதிருப்பதானது வேதனைக்குரியது.
மேலும் பச்சைப் பொருளாதாரம் நீலப் பொருளாதாரம் என பேசுகின்றானர்.
ஆனால் குறித்த பொருளாதாரங்களின் ஊடாக மக்களுக்கான நன்மைகள் எதுவும் இதுவரை கிடைத்திருக்கவில்லை.
பெண்கள் தமக்கான முன்னேற்றத்துக்கு நிறுவனங்களினை உருவாக்க வேண்டுமே தவிர சுரண்டும் நிறுவனங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. இவை எமது சேமிப்புக்களினை கொள்ளையிடுகின்றன.
குறிப்பாக இந்த நிதுவனங்களுக்கு மிக உறுதியான நம்பிக்கை இருக்கின்றது தங்கத்தினை கொண்டுவந்து அது வைத்துவிட்டு மீள எடுக்க மாட்டீர்கள் என்று. அதனால் குறித்த தங்கம் எல்லாம் தங்களுக்கு சொந்தம் ஆகிவிடும் என தான் மின்கம்பங்கள் தோறும் விளம்பரங்களினை காட்சிப்படுத்தி வருகின்றனர்.
அன்று எமது பிரதேசங்களில் மக்கள் வங்கியும் கிராமிய வங்கியும் ஒரு சில தனியார் வங்கியும் செய்த அடகு மற்றும் இலகுகடன் சேவையினை இன்று பினான்ஸ் நிறுவனங்கள் செய்கின்றன.
தற்போது யாழ்ப்பாணத்தில் பினான்ஸ் நிறுவனங்களினுடைய பெருக்கம் பல நூறுகளாய் உயர்ந்துவிட்டன. இதன் நோக்கம் எமது சேமிப்புகளினை கொள்ளையிடுவதாகவே இருக்கின்றது.
குறித்த சுரண்டலுக்கு பலியாகிக் கொண்டிருப்பவர்கள் எம்வீட்டுப் பெண்கள்தான் என்பதே வருத்தமான செய்தி.
இதேநேரம் குறித்த பெண்கள் யார் என்று பார்த்தால் முதன்மை பொருளாதாரம் என்று கூறும் விவசாயம், கால்நடையுள்ளிட்ட நாளாந்த தொழிலை செய்யும் பெண்கள் தான் இதில் சிக்கவைக்கப்பட்டுள்ளார்கள்.இந்த நிலைமையில் தான் நாம் நீலப் பொருளாதாரம், பசுமை பொருளாதாரம் பற்றிப் பேசுகின்றோம்.
மேலும், நாங்கள் புரியத் தவறியுள்ள விடையம் என்னவென்றல் நீலப் மற்றும் பசுமைப் பொருளாதாரம் என்பது என்ன அதை எவ்வாறு பயன்படுத்துவது, வளங்களினை நாம் எவ்வாறு அறுவடை செய்ய வேண்டும் என்பதினை.
இதை வழங்காத எமக்கான நிதுவனத்தினை உருவாக்காது இருப்பதால் தான் வடபகுதி உற்பத்தியாளர்காள் வேறு நபர்கள் நிறுவனங்கலினால் முழுமையாக சுரண்டப்படுகின்றார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
பு.கஜிந்தன்