பேராதனை – கொழும்பு கோட்டை கடுகதி ரயில் தடம் புரண்டது! - G...
News
பேராதனை – கொழும்பு கோட்டை கடுகதி ரயில் தடம் புரண்டது!
பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த கடுகதி ரயில், கங்கொட மற்றும் கடிகமுவ நிலையங்களுக்கு இடையில் இன்று (05) அதிகாலை தடம் புரண்டுள்ளது.
அதிகாலை 4.40 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்துக்கு, ரயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் பாறைகள் விழுந்திருந்தமை காரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மலையகப் பாதையிலான ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளன. ‘டிட்வா’ சூறாவளிக்குப் பின்னர் புனரமைக்கப்பட்ட பாதையில் பேராதனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த முதலாவது அலுவலக ரயிலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் ரயிலின் முன்பகுதி சேதமடைந்துள்ளதுடன், சாரதி உள்ளிட்ட ரயில் ஊழியர்கள் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.