அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு எதிரான மனு மீதான விசாரணைக்கு...
News
அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு எதிரான மனு மீதான விசாரணைக்கு அனுமதி!
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரான ஆனந்த விஜேபால, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்குத் தகுதியற்றவர் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினுடைய முன்னாள் நிர்வாகச் செயலாளர் ரேணுக பெரேராவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவைப் பரிசீலித்த பின்னரே உயர் நீதிமன்றம் குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக எமது நீதிமன்றச் செய்தியாளர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னர், அமைச்சர் ஆனந்த விஜேபால, ஜனாதிபதியினுடைய பணிக்குழாம் பிரதானியாகப் பணியாற்றி வருவதாகவும், ஆகவே அரசியலமைப்பின் பிரகாரம் அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை வகிப்பதற்குத் தகைமையற்றவர் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி குறித்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.