New Updates! Fresh news just arrived.

ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்னவுக்கு எதிரான மனு உயர்ந...

News

ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்னவுக்கு எதிரான மனு உயர்நீதிமன்றினால் நிராகரிப்பு!

September 28, 2026 1:32 pm
ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்னவுக்கு எதிரான மனு உயர்நீதிமன்றினால் நிராகரிப்பு!
நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம்சாட்டி, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஷானி அபேசேகர, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் அருட்தந்தை சிறில் காமினி ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த இரண்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியான சாந்த ஜயதிலக்க என்பவரால் இந்த இரண்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர் முன்னர் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்த சத்தியக்கடதாசி ஒன்றின் மூலம், நீதிமன்ற அவமதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அத்துடன் அருட்தந்தை சிறில் காமினி, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் அளித்த முறைப்பாடொன்றின் உள்ளடக்கம் மூலம் நீதிமன்ற அவமதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டி மற்றைய மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now