PSTAக்கு எதிரான மனுக்கள்: உயர் நீதிமன்றத்தின் வியாக்கியான...
News
PSTAக்கு எதிரான மனுக்கள்: உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்குக் கிடைத்தது!
'பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாத்தல்' (PSTA) சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்குக் கிடைத்துள்ளதாகச் சபாநாயகர் அலுவலகம் இன்று (10) உறுதிப்படுத்தியுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்துக்கு சவால் விடுத்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை, பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன, நீதியரசர்கள் அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் கடந்த நவம்பர் 4ஆம் திகதி ஆரம்பமானது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் இந்தச் சட்டமூலத்துக்கு எதிராக மொத்தம் 26 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
குறிப்பிட்ட சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
விசாரணைகளின் முடிவில், இந்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை குறித்த உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம், ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் முறைப்படி அனுப்பி வைக்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்தத தீர்மானம் சபாநாயகரை வந்தடைந்துள்ளது.