22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் இன்...
News
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் இன்று விசாரணை!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை சவால் செய்து தாக்கல் செய்யப்பட்டுள்ள 40க்கும் மேற்பட்ட மனுக்கள் இன்று (01) உயர்நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 18ஆம் திகதி 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் மனுக்களை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அந்தக் கால அவகாசம் நேற்று (31) நிறைவடைந்துள்ளது.
இந்தச் சட்டமூலம் நீதித்துறையின் சுயாதீனத்துக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என சில மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், அரசியலமைப்பின் விதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும், சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது என்பதால் அதனை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் சில மனுக்களில் கோரப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மனுக்களை ஆராய்வதற்காக ஐந்து பேர் கொண்ட நீதியரசர்கள் அமர்வு பிரதம நீதியரசரால் நேற்று நியமிக்கப்பட்டது.
அமர்வில் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேனவுடன் நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், குறித்த மனுக்கள் இன்று காலை 10 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.