New Updates! Fresh news just arrived.

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து பெற்றோலியக் கூட்ட...

News

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விளக்கம்

March 10, 2026 1:37 pm
எரிபொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விளக்கம்
உலகளாவிய எண்ணெய் அதிகரிப்பு காரணமாக ஒரே தடவையில் எரிபொருள் விலை உயர்வு ஏற்படுவதை தடுக்கும் நோக்கிலேயே தற்போது எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்தார்.

விசேட செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.

முன்னைய மாதங்களின் எரிபொருள் விலையுடன் ஒப்பிட்டே ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலை தீர்மானிக்கப்படுகிறது.

நாட்டில் 30 நாட்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது.

இருந்தபோதிலும், இலங்கைக்கு வருகைதரவுள்ள எண்ணெய் கப்பல்களில் உள்ள எண்ணெய் விலை சடுதியாக உயர்வடைந்து வருகிறது.

எனவே, ஒரே தடவையில் பாரியளவில் விலை அதிகரிப்பை தவிர்ப்பதற்காகவே, எரிபொருட்களின் விலையை குறைந்தது 10 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இந்தநிலையில், கையிருப்பிலுள்ள எரிபொருளை எதிர்வரும் மாதங்களுக்காக விநியோகித்து விலையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எதிர்பார்க்கிறது.

எனவே, தேவைக்கு மேலதிக எரிபொருளை சேமித்து வைப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, உலக சந்தையின் மாதாந்த சராசரியின் அடிப்படையிலேயே ஒவ்வொரு மாத இறுதியிலும் எரிபொருள் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

அதன்படி. உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறையுமாயின் பொதுமக்களுக்கு விலை நிவாரணம் வழங்க முடியும் என்றபோதிலும் தற்போது, அது பற்றிய எதிர்வுகூறல்களை முன்வைக்கமுடியாது.

எனினும், மசகு எண்ணெய் விலை விரைவில் குறைவடையுமாயின் மாத இறுதிக்கு முன்னரே விலையை குறைக்க முடியும் எனவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்தார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now