New Updates! Fresh news just arrived.

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தி...

News

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் புதிய அறிவிப்பு

March 30, 2026 1:27 pm
எரிபொருள் கையிருப்பு தொடர்பில் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் புதிய அறிவிப்பு
இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் (IOC) எரிபொருள் கப்பல் ஒன்று நேற்று (29) காலை கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருணா தெரிவித்துள்ளார்

அந்தக் கப்பல் 18,000 மெட்ரிக் தொன் டீசலையும், 18,000 மெட்ரிக் தொன் 92 ஒக்டேன் பெற்றோலையும் ஏற்றி வந்துள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருணா உறுதிப்படுத்தியுள்ளார்

அதன்படி ஏப்ரல் மாத நடுப்பகுதி வரை டீசல் கையிருப்பு போதுமானதாக உள்ளது என்றும், 92 மற்றும் 95 ஒக்டேன் ரக பெற்றோல் விநியோகம் ஜூன் மாதம் வரை உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையே சமீபத்தில் நடைபெற்ற இராஜதந்திர தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து இந்த எரிபொருள் ஏற்றுமதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நிலவி வரும் எரிபொருள் விநியோக சவால்களுக்குத் தீர்வு காணும் வகையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உயர் மட்ட இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.

அதன்படி, இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம், இலங்கை IOCக்கு ஒரு எரிபொருள் கப்பலை அனுப்ப முடிவு செய்துள்ளது. இதற்கிடையில், எதிர்வரும் மாதத்திற்குள் மொத்தம் 10 எரிபொருள் ஏற்றுமதி கப்பல்கள் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now