உள்ளூராட்சி மன்றங்களை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்! - Gur...
News
உள்ளூராட்சி மன்றங்களை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்!
உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றுள்ளது.
பொதுமக்களுக்கு விரைவான, வெளிப்படையான மற்றும் வினைத்திறன் மிக்க அரச சேவையை வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
உள்ளூராட்சி மன்றங்களின் வரி செலுத்துதல், கட்டணங்கள் செலுத்துதல், மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களை முன்பதிவு செய்தல், அனுமதிப்பத்திரங்களைப் பெறுதல் உள்ளிட்ட சேவைகளை டிஜிட்டல் முறையில் வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், GovPay உள்ளிட்ட டிஜிட்டல் அமைப்புகளை மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கப்படும் 300க்கும் மேற்பட்ட சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கைகளின் முன்னேற்றமும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக ஒரு மாவட்டத்தை மாதிரியாகத் தெரிவுசெய்து, முழுமையான டிஜிட்டல் சேவை கட்டமைப்பை உருவாக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். அரச ஊழியர்களின் நியமனம் முதல் ஓய்வு பெறும் வரையிலான நிர்வாகச் செயற்பாடுகளை உள்ளடக்கும் ‘GovHR’ அமைப்பு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.