New Updates! Fresh news just arrived.

அமெரிக்காவில் விமானம் விழுந்து விபத்து: பயணித்த அனைவரும் ...

News

அமெரிக்காவில் விமானம் விழுந்து விபத்து: பயணித்த அனைவரும் பலி!

November 2, 2026 10:02 am
அமெரிக்காவில் விமானம் விழுந்து விபத்து: பயணித்த அனைவரும் பலி!
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கிரெஸ்ட்ஹேவன் (Cresthaven) குடியிருப்புப் பகுதியில் 9 பேருடன் சென்ற 'லியர்ஜெட் 60' (Learjet 60) ரக சிறிய ரக விமானம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதாக அமெரிக்க பெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க கிழக்கு நேரப்படி பிற்பகல் 12.50 அளவில் (1750 GMT) இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

இதில் விமானத்தில் பயணித்த 9 பேருமே உயிரிழந்துள்ளதாக அமெரிக்க போக்குவரத்துச் செயலாளர் ஷீன் டஃபி (Sean Duffy) தனது சமூக வலைதளப் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.

டெக்சாஸில் உள்ள ஒஸ்டின்-பெர்க்ஸ்ட்ரோம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், பஹாமஸில் உள்ள வடக்கு எலுதேரா (North Eleuthera) விமான நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக விமானப் போக்குவரத்து நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now