New Updates! Fresh news just arrived.

கொழும்பில் தொடர் குண்டுத் தாக்குதலுக்கு திட்டமா? பரவும் ச...

News

கொழும்பில் தொடர் குண்டுத் தாக்குதலுக்கு திட்டமா? பரவும் செய்தி குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விசேட அறிவிப்பு

April 21, 2026 3:20 pm
கொழும்பில் தொடர் குண்டுத் தாக்குதலுக்கு திட்டமா? பரவும் செய்தி குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விசேட அறிவிப்பு
கொழும்பு உள்ளிட்ட சனநெரிசலான பகுதிகளில் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்த நபர் ஒருவர் தயாராகி வருவதாக சமூக ஊடகங்கள் மற்றும் சில இணையத்தளங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான எந்தவொரு சம்பவமும் பதிவாகவில்லை என்பதை அவர் மேலும் உறுதிப்படுத்தினார்.

எவ்வாறாயினும், 'கஞ்சிப்பானை இம்ரான்' என்பவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய நபர் ஒருவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now