நானுஓயா கிளரண்டனில் 1750 நாட் சம்பளத்தினை பெற்றுக்கொண்ட ...
News
நானுஓயா கிளரண்டனில் 1750 நாட் சம்பளத்தினை பெற்றுக்கொண்ட பெருந்தோட்ட மக்கள் பாற்சோறு சமைத்து கொண்டாட்டம்!
இலங்கை வரலாற்றில் மலையக பெருந்தோட்ட மக்களினை பொறுத்தவரையில் நாட்டின் 09வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனுர குமார திஸாநாயக்க அவர்களின் மூலமாக மாத்திரம் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய 1750 ரூபாய் சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று கொடுக்கப்பட்டிருப்பதாக மலையக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, 1750 ரூபாய் சம்பளத்தினை பெற்றுக்கொடுத்த ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கும் நன்றி கூறும் நிகழ்வானது இன்று (12) மாலை கிளரண்டன் கீழ் பிரிவு தோட்டத்தில் இடம் பெற்றது .
இதன் போது மக்கள் கருத்து தெரிவிக்கையி;
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1750 ரூபாய் நாளாந்த சம்பளத்தினை வழங்கிய நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசாங்கத்திற்கு நன்றி தெறிவிக்கும் விதமாக தலவாக்கலை பெருந்தோட்ட நிருவனத்திற்கு கீழ் இயங்கும் நானுஓயா கிளரண்டன் கீழ்பிரிவு தோட்டத்தில் பாற்சோறு சமைத்து மகிழ்ச்சியினை வெளியிட்டதோடு நாட்டின் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கும் நன்றிகளினை தெரிவித்தனர்.
இதேவேளை, மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கலாகிய நாங்கள் ஒவ்வொரு முறையும் சம்பள அதிகரிப்பினை பெருகின்ற போது வீதிக்கு இறங்கி பாரிய ஆர்ப்பாட்டங்களினை முன்னெடுத்து பெற்றுக்கொடுக்க முடியாத அரசாங்கமே இதுவரை காலமும் காணப்பட்டது.
இந்நிலையில், இலங்கை நாட்டின் வரலாற்றில் இதுவரை காலமும் எட்டு ஜானாதிபதிகள் இருந்த காலப்பகுதியிலும் எங்களுடைய சம்பள பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்கவில்லை ஆனால் 09வது ஜனாதிபதியான அனுரகுமார திஸாநாயக்க வந்தவுடனே மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களினுடைய 1750ரூபாய் சம்பளத்திற்கு பெற்று கொடுத்துள்ளார் எனவும் மக்கள் தெரிவித்தனர்.
வி.தீபன்ராஜ்