New Updates! Fresh news just arrived.

பூட்டானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் பி...

News

பூட்டானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் பிரதமர்!

September 6, 2026 10:23 am
பூட்டானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் பிரதமர்!
2026 விழிப்புணர்வுமிக்க உணவு முறைமைகள் பற்றிய உலகளாவிய மாநாட்டில் (Global Summit on Conscious Food Systems) பங்கேற்பதற்காக ஓகஸ்ட் 31 முதல் செப்டெம்பர் 04 வரை பூட்டானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

தமது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, பூட்டானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும் வகையில், பிரதமர் ஜிக்மே கேசர் நாம்கியால் வாங்சுக் அரசரைச் சந்தித்ததுடன், பூட்டான் பிரதமர் தாஷோ ஷெரிங் தொப்கே (Dasho Tshering Tobgay) மற்றும் கல்வி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் யீசாங் டே தபா (Yeezang De Thapa) ஆகியோருடனும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடாத்தினார்.

மேலும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) சிரேஷ்ட பிரதிநிதிகள் மற்றும் ஏனைய சர்வதேச பிரதிநிதிகள் உட்பட பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட இராஜதந்திரிகளுடனும் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஓகஸ்ட் 31 முதல் செப்டெம்பர் 05 ஆம் திகதி வரை பூட்டானில் மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 'ரோயல் பூட்டான் எயர்லைன்ஸ்' (Royal Bhutan Airlines) நிறுவனத்திற்குச் சொந்தமான KB 200 என்ற விமானம் மூலம் இவ்வாறு மீண்டும் நாட்டை வந்தடைந்தார்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, பிரதமர் திம்புவில் உள்ள தாஷிச்சோ சோங் (Tashichho Dzong) விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், அரச ஆடை அருங்காட்சியகம், செம்தோகா சோங் கோட்டை மற்றும் பாரோவில் உள்ள பூட்டான் தேசிய அருங்காட்சியகம் ஆகியவற்றையும் பார்வையிட்டார்.

இலங்கைக்கும் பூட்டானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளையும் நட்புறவையும் மேலும் வலுப்படுத்தி கல்வி, கலாசாரம், சூழல், நிலையான அபிவிருத்தி மற்றும் மக்களுக்கிடையிலான உறவுகள் உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கு இந்த விஜயம் ஒரு முக்கிய சந்தர்ப்பமாக அமைந்தது எனக் குறிப்பிடப்படுகிறது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now