பேராதனை சென்றடைந்த பொடி மெனிகே ரயில்
News
பேராதனை சென்றடைந்த பொடி மெனிகே ரயில்
மலையக ரயில் பாதையிலான ரயில் போக்குவரத்து நடவடிக்கைகள் இன்று (02) கொழும்பு கோட்டையிலிருந்து பேராதனை மற்றும் கம்பளை வரை ஆரம்பிக்கப்பட்டன.
டித்வா (Ditwa) சூறாவளிக்குப் பிறகு மலையகப் பாதையில் ரம்புக்கனையிலிருந்து கண்டி மற்றும் பதுளை வரையான ரயில் போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, நேற்று வரை ரம்புக்கனை ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்பட்ட ரயில்களை, இன்று முதல் பேராதனை மற்றும் கம்பளை வரை இயக்குவதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்போது, இன்று காலை 5.55 மணிக்குக் கொழும்பு கோட்டையிலிருந்து 'பொடி மெனிகே' ரயில் தனது பயணத்தை ஆரம்பித்த போதிலும், இன்றைய தினம் அதில் பயணிகள் பயணிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதுடன், அது ஒரு சோதனை ரயிலாகவே இயக்கப்பட்டது.
ரம்புக்கனை ரயில் நிலையத்தில் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட ரயில்வே திணைக்களம் மற்றும் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளும் அந்த ரயிலில் பயணித்தனர்.
மேலும், ரயில் பாதையைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட பொறியியலாளர்கள் மற்றும் ஊழியர்களும் இந்தச் சோதனை ரயிலில் பயணித்தமை சிறப்பு அம்சமாகும்.
இதற்கமைய, ரயில் பேராதனை ரயில் நிலையத்தைச் சென்றடைந்ததும் சிறப்பு வரவேற்பு நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கிருந்து பொடி மெனிகே ரயில் கம்பளை ரயில் நிலையம் வரையில் இயக்கப்பட உள்ளது.