எரிபொருள் வரிசைகளைக் கட்டுப்படுத்த பொலிஸார் குவிப்பு! - G...
News
எரிபொருள் வரிசைகளைக் கட்டுப்படுத்த பொலிஸார் குவிப்பு!
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டு முறையினை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதினைத் தொடர்ந்து, அங்கு ஏற்படும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்திருப்பதாக போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதி பாதுகாப்புப் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
பொதுமக்களிடையே ஏற்பட்டிருக்கும் தேவையற்ற பதற்றம் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் பாரிய வாகன நெரிசலும் நீண்ட வரிசைகளும் உருவாகி இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு அனைத்து பெற்றோல் நிரப்பு நிலையங்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் சேனாதீர:
"இதற்காகப் பொதுமக்கள் பதற்றமடையத் தேவையில்லை. QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், அந்தந்த வாகன வகைகளுக்கு ஏற்பத் தேவையான எரிபொருள் அளவு முறையாக வழங்கப்படும். மக்கள் காட்டும் தேவையற்ற அவசரமே எரிபொருள் நிலையங்களில் இவ்வளவு கூட்ட நெரிசலுக்குக் காரணமாகி இருக்கின்றது. இதனால், அந்தந்தப் பகுதிகளில் பாதுகாப்பினை உறுதிப்படுத்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் தலைமையகப் பொலிஸ் பரிசோதகர்களினை நாம் கடமைகளில் ஈடுபடுத்தியுள்ளோம்.
பொதுமக்கள் அமைதி காத்தால் குறித்த பிரச்சினை ஏற்படாது. 10 லீற்றர் தேவைப்படும் இடத்தில் 50 லீற்றர் அடிக்க முற்படுகின்றார்கள். இவை அனைத்தும் அவசரப்படுவதால் ஏற்படும் விளைவுகள். யுத்த நிலைமை காரணமாகக் கொண்டுவரப்பட்டுள்ள ஒரு முகாமைத்துவமே இது. உங்கள் வாகனத்திற்குத் தேவையான எரிபொருளை எந்தவொரு நிலையத்தில் இருந்தும் பெற்றுக்கொள்ள முடியும். ஆகவே, வீதி நெரிசலைக் குறைக்கவும் ஒழுங்கைப் பேணவும் போக்குவரத்துப் பொலிஸாரும் ஏனைய அதிகாரிகளும் உரிய நடவடிக்கைகளினை முன்னெடுத்து வருகின்றனர்" எனவும் தெரிவித்தார்.