தெல்தெனிய பேஸ்புக் விருந்தில் பொலிஸ் நடவடிக்கை – 41 பேர் ...
News
தெல்தெனிய பேஸ்புக் விருந்தில் பொலிஸ் நடவடிக்கை – 41 பேர் கைது!
தெல்தெனிய விக்டோரியா பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தொன்றில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின்போது 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 36 ஆண்களும் 5 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெல்தெனிய பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சோதனையின் போது சந்தேகநபர்களிடம் இருந்து பல்வேறு வகையான போதைப்பொருட்கள் மற்றும் மதுபானப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றில் 947 மில்லிகிராம் கஞ்சா, 3 கிராம் 657 மில்லிகிராம் ஹேஷ், 1 கிராம் 276 மில்லிகிராம் ஐஸ், 18 போதை மாத்திரைகள் மற்றும் 21 சட்டவிரோத சிகரெட்டுகள் அடங்குகின்றன.
மேலும், 500 மில்லிலீற்றர் கொள்ளளவுடைய 35 பியர் கேன்களும், 750 மில்லிலீற்றர் கொள்ளளவுடைய 13 மதுபான போத்தல்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட ஆண்கள் 21 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கெலியோய, அலுத்வத்தை, வரகாபொல, பேராதனை, அம்பிட்டிய, கண்டி மற்றும் ஹங்குரன்கெத்த ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட பெண்கள் 22 முதல் 43 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன், பல்லேகல, பேராதனை, ஹங்குரன்கெத்த, தெஹிவளை மற்றும் கட்டுக்கஸ்தோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.