லீசிங் வாகன பறிமுதல் தொடர்பில் பொலிஸார் அறிவிப்பு!
News

லீசிங் அல்லது நிதி நிறுவனங்களின் கீழ் உள்ள வாகனங்களை மீளக் கைப்பற்றும்போது, சட்டத்திற்கு அமைவாக செயற்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
2000ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க குத்தகை நிதியளிப்புச் சட்டத்தின் 27ஆம் பிரிவில் இதற்கான நடைமுறைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாகனத்தை மீளப் பெறுவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அல்லது தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட நடைமுறைகளை மீறி பலவந்தமாக வாகனங்களை கைப்பற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்றால், அதற்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.