New Updates! Fresh news just arrived.

பொலிஸ் பரிசோதகர் பாலேந்திரசிங்க கொலை: மோட்டார் சைக்கிள் ஓ...

News

பொலிஸ் பரிசோதகர் பாலேந்திரசிங்க கொலை: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது!

May 12, 2026 2:50 pm
பொலிஸ் பரிசோதகர் பாலேந்திரசிங்க கொலை: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது!
பொலிஸ் பரிசோதகர் பாலேந்திரசிங்க சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், துப்பாக்கிதாரி பயணித்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

'கரந்தெனிய சுத்தா' என்ன்னும் குற்றவாளியினுடைய சகோதரரும், தற்போது குறித்த பணியகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்ற 'எஸ்.எஃப். ராஜு'விடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளிவந்த தகவல்களுக்கு அமைய குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கரந்தெனிய சுத்தாவால் வழிநடத்தப்பட்ட கொலைகள் தொடர்பில் தகவல்கள் அந்த பொலிஸ் அதிகாரிடமிருந்த காரணத்தினாலேயே அவர் கொல்லப்பட்டதாக குறித்த சந்தேகநபர் வெளிப்படுத்தியுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், தாக்குதலின் பின்னர் கரந்தெனிய சுத்தாவினால் துபாய் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடுமையான போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகிய குறித்த துப்பாக்கிதாரி, துபாயில் போதைப்பொருள் கிடைக்காமையினால் தற்கொலை செய்துகொண்டதாக சந்தேகநபர்களிடம் நடாத்தப்பட்ட விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.

இந்தத் தகவல் உண்மையா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை, ராஜுவிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கரந்தெனிய சுத்தாவிற்குச் சொந்தமான டி-56 ரக துப்பாக்கி ஒன்று, அதன் மெகசின் மற்றும் 15 தோட்டாக்கள் மீட்டியாகொட பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டதன் ஊடாக, கரந்தெனிய சுத்தாவிற்குச் சொந்தமானவை எனக் தெரிவிக்கப்படும் 8 டி-56 ரக துப்பாக்கிகளில் 6 துப்பாக்கிகள் இதுவரை பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடிதுவக்குவின் நேரடி மேற்பார்வையில், பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன கொடிதுவக்குவின் வழிகாட்டலில், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரிவங்ச உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now