பொலிஸ் உத்தியோகத்தரின் உறவினர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது! ...
News
பொலிஸ் உத்தியோகத்தரின் உறவினர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!
பொலிஸ் உத்தியோகத்தரின் உறவினரான ஐஸ் போதைப்பொருளோடு கைதான இளைஞனிடம் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய ஜும்மா பள்ளிவாசல் அருகில் இன்று (08) மதியம் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போது குறித்த இளைஞன் சந்தேகத்தின் அடிப்படையில் கைதானார்.
இதன்படி, குறித்த 28 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரான இளைஞனிடமிருந்து 25 கிராம் 280 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த சந்தேக நபர் பொலிஸ் உத்தியோகத்தரினுடைய உறவினர் என்பதோடு, அண்மைக்காலமாக அப்பகுதி இளைஞர்களுக்கு போதைப்பொருட்களை இரகசியமாக விநியோகித்து வருபவர் என்பதுவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சுற்றி வளைப்பானது மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைத்தின் பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ்விடயம் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளினை கல்முனை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருவதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.
பாறுக் ஷிஹான்