வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துபவர்களுக்கு பொலிஸார...
News
வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துபவர்களுக்கு பொலிஸார் விசேட அறிவிப்பு
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளான மிரிஹான, மஹரகம, தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸை ஆகிய இடங்களில் உள்ள வீடுகளில், வீட்டு வேலைக்காக அமர்த்தப்படும் சில நபர்களால் தங்கம் மற்றும் பணம் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிலர் திட்டமிட்ட முறையில் வசதி படைத்த வீடுகளை இலக்கு வைத்து, குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறுகிய காலத்திலேயே வீட்டு உரிமையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொண்டு பின்னர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நிலை காணப்படுவதால், பொதுமக்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
பொலிஸார் வழங்கியுள்ள முக்கிய ஆலோசனைகள்:
வேலைக்கு அமர்த்தப்படும் நபரின் தேசிய அடையாள அட்டை (NIC) நகலைப் பெற்றுக்கொண்டு, அதன் அசலை ஒப்பிட்டு உறுதிப்படுத்த வேண்டும்.
பணியாளரின் நிரந்தர மற்றும் தற்காலிக வசிப்பிடங்களுக்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலிருந்து பெறப்பட்ட நற்சான்றிதழ் அல்லது அறிக்கையை சமர்ப்பிக்கக் கோர வேண்டும்.
பணியாளரின் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் மற்றும் அவசர தொடர்பு தொலைபேசி இலக்கங்கள் முன்கூட்டியே பெற்றுக்கொள்ள வேண்டும்.
வீட்டில் உள்ள தங்கம், பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை பாதுகாப்பான இடங்களில் வைத்திருக்க வேண்டும்.
வீட்டு பணியாளர்களை வீட்டில் தனியாக விட்டுச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
பணியாளர்களின் விபரங்கள் அடங்கிய ஆவணங்களின் பிரதிகளை அந்தப் பகுதிக்குரிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் பணம் மற்றும் பெறுமதியான சொத்துக்களின் இழப்புகளைத் தவிர்க்க முடியும் என இலங்கை பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.