மலேசியாவில் கைதான 3 பாதாள உலகக் குற்றவாளிகளுடன் இலங்கை தி...
News
மலேசியாவில் கைதான 3 பாதாள உலகக் குற்றவாளிகளுடன் இலங்கை திரும்பியது பொலிஸ் குழு!
முக்கிய பாதாள உலகக் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் மூவரை மலேசியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்து வர உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல தலைமையிலான பொலிஸ் குழுவினர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
மலேசியாவிலிருந்து பிற்பகல் 4 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்த UL 317 ரக விமானம் மூலம் இவர்கள் அழைத்து வரப்பட்டனர்.
இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில் ஒருவர் 'கஞ்சிப்பானை இம்ரான்' என்பவரினுடைய முக்கிய உதவியாளர் என்றும், அவருக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கொலை உள்ளிட்ட பல தீவிர குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளினை முன்னெடுத்து வருகின்றனர்.