போலி ‘Gov Pay’ தளம் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!
News

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை இணையம் ஊடாக செலுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ‘Gov Pay’ சேவையைப் போன்ற போலி இணையத்தளம் ஒன்றை உருவாக்கி பொதுமக்களை ஏமாற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
இந்த மோசடி மூலம் பொதுமக்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்வதுடன், அவர்களது முக்கியமான தனிப்பட்ட மற்றும் நிதி தொடர்பான தகவல்களையும் மோசடியாளர்கள் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘Gov Pay’ ஊடாக போக்குவரத்து அபராதங்களை செலுத்துவதற்கு அதிகாரப்பூர்வமாக வேறு இணையத்தளம் எதுவும் இல்லை என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, சந்தேகத்திற்கிடமான இணைய இணைப்புகள் ஊடாக பணம் செலுத்துவதைத் தவிர்க்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து அபராதங்களை மக்கள் இலகுவாக செலுத்துவதற்கும், நிதி மோசடிகளை கட்டுப்படுத்துவதற்குமான நடவடிக்கையாக ‘Gov Pay’ முறைமை இந்த வருட ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
எனினும், குறித்த சேவையின் பெயர் மற்றும் தோற்றத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி இணையத்தளத்திற்கான இணைப்புகள் பொதுமக்களின் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அனுப்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவை SMS மற்றும் WhatsApp செய்திகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளிலும் பகிரப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தகைய இணைப்புகளை திறந்து தனிப்பட்ட அல்லது வங்கி தொடர்பான தகவல்களை வழங்க வேண்டாம் என போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
‘Gov Pay’ பணப்பரிவர்த்தனைக்கு பயன்படுத்தக்கூடிய அதிகாரப்பூர்வ தளம் மட்டுமே இருப்பதால், போலியான இணையத்தளங்கள் மற்றும் அவற்றின் இணைப்புகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.