பாதசாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு பொல...
News
பாதசாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு பொலிசார் விடுத்துள்ள எச்சரிக்கை!
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பிரதி காவல்துறை மா அதிபர் டப்ளியூ.பி.ஜே.சேனாதீர இது குறித்துத் தெரிவிக்கையில்,
இந்த விபத்துக்களில் உந்துருளி ஓட்டுநர்களும், அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களுமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டின் தரவுகளின்படி, வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களில் 31 சதவீதமானோர் பாதசாரிகள் என அவர் சுட்டிக்காட்டினார். இந்த ஆண்டு அந்தத் தரவுகளில் சிறிய அதிகரிப்பு காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வீதிகளில் பயணிக்கும் பொதுமக்கள் ஒழுக்க விதிகளையும், சட்டங்களையும் பின்பற்றுவதன் மூலம் விபத்துக்களைக் குறைக்க முடியும் என பிரதி காவல்துறை மா அதிபர் தெரிவித்தார்.
வீதியின் வலதுபுறமாக நடக்கவும். வீதியைக் கடக்கும்போது மிகுந்த அவதானத்துடன் செயல்படவும்.
வீதியில் நடக்கும்போதோ அல்லது வாகனங்களைச் செலுத்தும்போதோ கைப்பேசியில் பேசுவதைத் முற்றாகத் தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களைக் கண்டறியும் சோதனைகள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான சோதனைகள் தற்போது நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வீதி விபத்துக்களைத் தவிர்ப்பது குறித்து தற்போது சமூகத்தில் பெரியளவிலான கலந்துரையாடல்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், வீதி ஒழுக்க விதிகளைப் பின்பற்றுவது ஒவ்வொரு குடிமகனினதும் பொறுப்பு எனவும் வலியுறுத்தினார்.