New Updates! Fresh news just arrived.

தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

News

தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

August 15, 2026 6:42 am
தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு
தகராறொன்றின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறியதைத் தொடர்ந்து, குறித்த அதிகாரி பொல்லினால் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் பலத்த காயங்களுக்கு உள்ளான அவர், தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனினும், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை (13) உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வெல்லவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய 54 வயதுடைய பொலிஸ் அதிகாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்த உண்மைகளை கண்டறியும் நோக்கில் விசாரணை நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now