மலரும் மூளாய் அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் பொங்கல் வ...
News
மலரும் மூளாய் அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா!
மலரும் மூளாய் அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் விழாவானது நேற்றையதினம் மூளாய் - பிரசாத் அரங்கில் நடைபெற்றது.
இதன்போது பாரம்பரிய போட்டிகளான மா இடித்தல், முட்டி உடைத்தல், கீரை வகைகளை இனங்காணல் உள்ளிட்ட பல போட்டிகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் நடைபெற்றன.
மலரும் மூளாய் அபிவிருத்தி மையத்தின் தலைவர் தி.அம்பிகை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக யாழ். மாநகர சபை ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரனும், சிறப்பு விருந்தினராக ஓய்வு நிலை நிர்வாக அதிகாரி வி.உதயசூரியனும், கௌரவ விருந்தினர்களாக வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் வே.சச்சிதானந்தம் மற்றும் கிராம சேவகர் வ.சிவரூபனும் கலந்து சிறப்பித்துடன், கிராம மக்கள், சிறார்கள் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.
பு.கஜிந்தன்