துறைமுக நகர கொலைச் சம்பவம்: சீகிரியாவில் மேலும் இரு சீன ப...
News
துறைமுக நகர கொலைச் சம்பவம்: சீகிரியாவில் மேலும் இரு சீன பிரஜைகள் கைது!
கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீன பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த மேலும் இருவர் சீகிரியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, சீகிரிய பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் மறைந்திருந்த இரு சீன பிரஜைகளே நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை 23ஆம் திகதி கொழும்பு துறைமுக நகரில் சீன பிரஜைகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து ஒருவர் கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். பின்னர், குறித்த நபரின் சடலம் எஹெலியகொடை பகுதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே சில சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலர் தலைமறைவாகியிருந்ததால், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இதன்போது, சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்ட மூன்று சீன பிரஜைகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடமும் முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், தேடப்பட்டு வந்தவர்களில் இருவர் சீகிரியாவில் பதுங்கியிருந்தமை கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (29) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.