New Updates! Fresh news just arrived.

மழை அதிகரிக்கும் சாத்தியம்: வளிமண்டலவியல் திணைக்களம் விடு...

News

மழை அதிகரிக்கும் சாத்தியம்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

September 18, 2026 7:39 pm
மழை அதிகரிக்கும் சாத்தியம்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!
அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை வீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீட்டர் அளவிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும் முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு ஒருசில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துகளினை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளினை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களமானது, பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now