பொதுத்தேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட அரச காணி முறையான பராமரிப்...
News
பொதுத்தேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட அரச காணி முறையான பராமரிப்பின்மை: ஏற்பாடுகளை மேற்கொள்வதாக தீர்மானம்!
இறக்காம பிரதேச செயலக பிரிவில் பொதுத்தேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட அரச காணி முறையான பராமரிப்பின்மையால் சுற்றாடலுக்கு மாசு ஏற்படுத்துவதுடன் டெங்கு நோய் பரவக்கூடிய நிலைமை காணப்படுவதாக இறக்காம பிரதேச மக்கள் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்உதுமாலெப்பை அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து பாரளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, இறக்காம பிரதேச தவிசாளர் என்.எம்.முஸ்மி மற்றும் இறக்காம பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸாம், இறக்காம பிரதேச சபையின் செயலாளர் எம்.ஐபாயிஸ், இறக்காம பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல்.எம்.றஜா, எம்.என்.நாஸர் மற்றும் அம்பாறை மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளரின் பிரதிநிதி, இறக்காம பிரதேச பொது வைத்திய அதிகாரியின் பிரதிநிதி ஆகியோர்கள் பொதுத்தேவைக்காக ஒதுக்கப்பட்ட காணி அமைந்துள்ள இடத்தை பார்வையிட்டனர்.
இது தொடர்பாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம, அம்பாறை மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் நத்மினி, அம்பாறை மாவட்ட நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் திரு பண்டார ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு குறிப்பிட்ட அரச காணியை சுத்தப்படுத்தி எல்லையிட வேண்டியதன் முக்கியத்துவத்தை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெளிவுபடுத்தினார்.
இதன்பின் இறக்காம பிரதேச சபை தவிசாளர், இறக்காம பிரதேச செயலாளர், அம்பாறை மாவட்ட அதவி உள்ளூராட்சி ஆணையாளர், அம்பாறை மாவட்ட நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோர்கள் ஒன்றினைந்து குறிப்பிட்ட பொதுத்தேவைக்காக ஒதுக்கப்பட்டுள்ள அரச காணியை விரைவில் சுத்தம் செய்வதாகவும், குறிப்பிட்ட காணிக்கான சுற்று வேலிகளை அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
கே எ. ஹமீட்