20 வருடங்களுக்கு மேலாக செப்பனிடப்படாமலிருந்த பொத்துவில் ஜ...
News
20 வருடங்களுக்கு மேலாக செப்பனிடப்படாமலிருந்த பொத்துவில் ஜெயிக்கா சுனாமி கிராம வீதி: காபட் வீதியாக செப்பனிடும் அங்குரார்பண நிகழ்வு!
கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு, மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் 2 கோடியே 62 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் பொத்துவில் பிரதேசத்தின் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக செப்பனிடப்படாமல் இருந்த 1200 மீட்டர் நீளமான ஜெய்க்கா சுனாமி கிராம வீதி காபட் வீதியாக செப்பனிடும் அங்குரார்ப்பண நிகழ்வு தேசிய மக்கள் சக்தியின் பொத்துவில் பிரதேச அமைப்பாளர் ஆதம் சலீம் அவர்களின் தலைமையில், அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், அரசியல் பேரவை உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவினால் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (14) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், பொத்துவில் பிரதேச செயலாளர் ஏ.சீ.எம். நஸீல், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அக்கரைப்பற்று-பொத்துவில் பிராந்திய நிறைவேற்று பொறியியலாளர் அப்துல் பாரி மற்றும் தேசிய மக்கள் சக்தி பிரதேச சபை உறுப்பினர்களான தோழர் மஹ்ரூப், தோழர் புனீதன், பொத்துவில் பிரதேச பிரஜா சக்தி தலைவர்கள், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச செயற்பாட்டாளர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பு செயலாளர் ஆசிரியர் எஸ்.எம். ஆரிப் உட்பட பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)