கோழி இறைச்சி, முட்டை விலை அதிகரிக்கும் அபாயம்!
News

சோள இறக்குமதிக்கான அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை உயரக்கூடும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
சோளத்துக்கு பதிலாக அரிசியைப் பயன்படுத்தி கால்நடை தீவனம் தயாரிப்பதால், கோழி மற்றும் முட்டை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், சோளத் தட்டுப்பாடு காரணமாக சிறிய அளவிலான பண்ணையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களில் சுமார் 20 சதவீதமானோர் தொழிலில் இருந்து விலகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.