New Updates! Fresh news just arrived.

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதியாக பிரதீபராஜா தெரிவு...

News

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதியாக பிரதீபராஜா தெரிவு!

March 20, 2026 5:20 pm
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதியாக பிரதீபராஜா தெரிவு!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் புதிய பீடாதிபதியாக புவியியற்றுறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே பதவியில் இருந்த கலைப்பீட பீடாதிபதியான ரகுமாராமின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் புதிய பீடாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றது.

இந்நிலையில் அதிக வாக்குகளை பெற்றுக்கொண்டவர் என்ற அடிப்படையில் நாகமுத்து பிரதீபராஜா கலைப்பீட பீடாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடந்த காலங்களில் வானியல் ஆய்வுகளை துல்லியமாக கணித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now