New Updates! Fresh news just arrived.

பிரஜா சக்தி தேசிய வேலைத்திட்டம்: நாவிதன்வெளியில் "கி...

News

பிரஜா சக்தி தேசிய வேலைத்திட்டம்: நாவிதன்வெளியில் "கிட்டங்கி குயின் பாக்" புதிய வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 2, 2026 4:38 pm
பிரஜா சக்தி தேசிய வேலைத்திட்டம்: நாவிதன்வெளியில் "கிட்டங்கி குயின் பாக்" புதிய வேலைத்திட்டம் ஆரம்பம்!
“ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்" பிரஜா சக்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 49 இலச்சம் ரூபா செலவில் அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கீழ் கிட்டங்கி “குயின் பாக்” வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்திரன் தலைமையில் கிட்டங்கி-மன்டூர் பிரதான வீதியில் இன்று (02) நடைபெற்றது.

கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான வஸந்த பியதிஸ்ஸ பிரதம அதிதியாக கலந்து கொண்டு வேலை திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட செயலாளர் அனுபமா மங்கள விக்கிரமாராச்சி, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஏ.பி முனாஸீர், மாவட்ட பிரதம கணக்காளர் ஏ.எல். மஹ்ரூப், உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன், சபை உறுப்பினர் கே.நிரோஜன் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி திலகராணி கிருபைராஜா, கணக்காளர் கே.றிஸ்வி யஹ்சர், சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிசி.வை.இந்திரஜித் உட்பட பிரஜா சக்தி சமூக அபிவிருத்தி குழுவின் தவிசாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

(ஷனா)
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now