New Updates! Fresh news just arrived.

பிரஜாசக்தி நிகழ்ச்சித்திட்டம் - 2026 : 30 பயனாளிகளுக்கு...

News

பிரஜாசக்தி நிகழ்ச்சித்திட்டம் - 2026 : 30 பயனாளிகளுக்கு முதற்கட்ட காசோலைகள் வழங்கி வைப்பு!

April 7, 2026 10:43 am
பிரஜாசக்தி  நிகழ்ச்சித்திட்டம்  - 2026 : 30 பயனாளிகளுக்கு முதற்கட்ட காசோலைகள் வழங்கி வைப்பு!
“தமக்கான ஓர் இடம் அழகான வாழ்க்கை” எனும் அரசின் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, சாய்ந்தமருது மற்றும் காரைதீவு ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பயனாளிகளுக்கான (10 இலட்சம் பெறுமதியான) வீடுகளுக்கான முதற்கட்ட காசோலையான 150,000/- பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நேற்று (06) நடைபெற்றது.

இந் நிகழ்வில், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும் கரையோரப் பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக், தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான், தேசிய மக்கள் சக்தியின் மருதமுனை அமைப்பாளர் தோழர் றினாஸ், மாவடிப்பள்ளி அமைப்பாளர் தோழர் சப்றூஸ், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் எஸ்.இம்தியாஸ், இணைப்புச் செயலாளர் ஆசிரியர் எஸ்.எம்.ஆரிப், பிரஜாசக்தியின் தவிசாளர்கள் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், பயனாளிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now